நாடு எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமை காரணமாக உள்ளூர் தொழில்துறை ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.இதை பிரதமருக்கு தெரிவிக்கும் ஊடக மாநாட்டில், உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ .5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இன்று ஜூன் 10, வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு  நாடு கொரோனா தொற்றுநோய், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ள நிலையில், உள்ளூர் தொழில்துறை ஊடகவியலாளர்களுக்கு தங்களது குடும்பங்களின் உணவுத் தேவையை கூட​ பூர்த்திசெய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

"பொதுமக்களிடம் செய்திகள் சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் உள்ளூர் ஊடகவியலாளர்களின் செய்தித்தாள் அச்சிடுதல், விற்பனை நிறுத்தப்பட்டிருக்கின்றது, மின்னணு ஊடக அறிக்கையிடல் கடும் நெருக்கடியில் உள்ளது, மற்றும் அவர்களது குடும்பங்கள் எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சரியான வருமானம் இல்லாமல் கடுமையான நெருக்கடிகடியினுள் இருக்கின்றோம். "

ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்பேலி மற்றும் ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கருணாரத்ன கமகே ஆகியோர் உள்ளூர் ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கக் குழு இதை பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொழிற்சங்க உரிமைகள் எதுவுமே இல்லாத தங்களது நிலைமையை ஆழமாகக் கருத்தில் கொண்டு  ரூ 5 ஆயிரம் வழங்குமாறு ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் இந்த சூழ்நிலையை ஆழமாக கவனத்தில்கொண்டு தொழில்துறை உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை  வழங்குமாறு ஊடக தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி