ஜூன் 14ம் திகதி வரை கிடைக்கும் கொவிட் தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்தும் பயணத்தடை நடைமுறைப்படுத்துவதா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்குமென ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே கூறியுள்ளார்.

நேற்றைய தினம் (9) கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளரொருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் கொவிட் தொற்றாளர்களின் சிறிதளவு அதிகரிப்பும்,கொவிட் மரணங்களில் சுமார் நூற்றுக்கு 28 வீத அதிகரிப்பும் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் விளக்கமளித்த அவர் பயணத்தடை விதித்து இரு வாரங்கள் மாத்திரமே ஆகின்றது. முன்கூட்டியே வைரஸ் தொற்றிய நோயாளிகள் தற்போது கண்டறியப்படுவதனால் மேலும் சிறிது காலம் பார்க்க வேண்டியுள்ளதெனவும் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி