கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை சட்டத்தை கடுமையாக்குமாறு விசேட மருத்துவர்களின் சங்கம், ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தினம் தினம் வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகளுக்கு அதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த சங்கம் அது தொடர்பில் கடித மூலம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவர் ஆர். ஞானசேகரம் ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 12 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மரணங்கள் 28 வீதமாக அதிகரித்துக் காணப்படுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி