ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நடைபெற்ற ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

மரணதண்டனை விதிக்கப்பட்டவரான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமை தொடர்பில் சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

புகையிலை மற்றும் மதுபானம் காரணமாக இலங்கையில் தினமும் குறைந்தது 85 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கும் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், ”கால் போத்தல்” விற்பனையை ஒழிப்பது, இதற்கு ஒரு தீர்வாக அமையுமென தொடர்பில் முன்மொழிந்துள்ளார்.

வலிமைமிக்க ஐ.தே.க க்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும் இது மொட்டுக் கட்சிக்கும் நடக்காது என்று கூற முடியாது என வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வனவள அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களிக்காததால் தோல்வியடைந்த மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த நிரோஷன் பிரேமரத்ன மற்றும் மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த பத்ம உதயசாந்த ஆகிய இருவருக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கி நாடளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும் என்று  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை இளம் தலைமைத்துவத்தின் கீழ் ஒப்படைக்க இன்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்ட தெரிவிக்கப்படுகின்றது.

சமகி ஜன பலவேகயவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இன்று (13) காலை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கங்கள் கட்சியின் தலைமையை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசீர்வதித்தனர்.

இம்முறை பொதுத் தேர்தலுக்காக 22 மாவட்டங்களில் 12,985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.196 மக்கள் பிரதிநிதிகள் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இதற்காக 7452 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நேற்று பிற்பகல் பாதுக்கையில் பதிலளித்தார்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி