தமிழ் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வல்வெட்டித்துறை மாநகரசபையால் நகரிலுள்ள பொது பூங்காவை ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி வல்வெட்டித்துறை தீருவில் பூங்கா மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 சுகாதார விதிகளின்படி, மாவீரர் தினம் இன்று [27] அனுஷ்டிக்கப்படும்.

மாவீரர்களின் கல்லறைகளுக்கு செல்வதை  ராணுவமும்,பொலிசாரும் தடுப்பதால் பொது இடத்தை ஒதுக்கித்தருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை மாநகர சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

காவல்துறையினர் எதிர்ப்பின் காரணமாக அனுமதி வழங்க மறுத்த மாநகர சபை, பின்னர் விசேட கூட்டத்தை கூட்டி பொது இடத்தை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஒதுக்கியது.

மாவீரர் தின அனுஷ்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

அரசியல் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மாவீரர்களுக்கு பொது இடங்களிலும் தனிப்பட்ட இடங்களிலும் அஞ்சலி செலுத்த வேண்டும் என சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி