உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் ரஷியர்களின் பங்கு இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷியா-உக்ரைன் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது முதல் இருநாடுகள் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது. இதை தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு பகுதிகளை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்தனர்.

இவர்கள் ரஷிய ராணுவத்தின் உதவியோடு அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த நிலையில் உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் ரஷியர்களின் பங்கு இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “டிசம்பர் 1 ம்திகதி நம் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கும் என்று எனக்கு தகவல் கிடைத்தது. அரசின் எதிர்ப்பாளராக கருதப்படும் தொழில் அதிபர் ரினாட் அக்மெடோவ், உக்ரைனிய அரசுக்கு எதிரான போருக்கு இழுக்கப்படுகிறார். இது தொடர்பாக அவருக்கும் ரஷியா பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த உரையாடலின் ஓடியோ என்னிடம் உள்ளது” என கூறினார்.

ஆனால் இந்த குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தொழில் அதிபர் ரினாட் அக்மெடோவ், அதிபர் ஜெலன்ஸ்கி பொய் பரப்புரை செய்வதாக சாடியுள்ளார். அதே போல் ரஷியாவும் இந்த குற்றசாட்டை மறுத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி