அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம்.

இலங்கையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலங்களை கடலுக்குள் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளாமை அந்த உயிர்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக  உலகப் புகழ்பெற்ற கடல் உயிரியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த  தடுப்புக்காவல் கைதியின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சிறைக்கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

மன்னார் – மாந்தை மேற்கு கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள எழுவர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (5) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் அக்கடிதத்தின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் அவர் வென்றதாக செய்தி ஊடகங்கள் பகலில் அறிவித்தன.

பசில்ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் பார்ப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (09) பின்னர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்தும் அமுல்படுத்த எண்ணம் இல்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

வைரஸ் ஒழிப்பிற்கான தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கிவைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், இரு வேட்பாளர்களுக்கான பிரசார குழுவும் தாங்கள் வெற்றி பெறுவதற்கான போதுமான முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சை  கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமென, நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவில் நடந்து வரும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நேரடியாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (02) அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி