தாய்லாந்தில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வர உள்ளது.தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான  "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் அவர் என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார் என்று காந்தி கூறிய அதே வார்த்தைகளை வடக்கு-கிழக்கில் உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் காவலில் இருந்த லுனுவிலகே லசந்த என்றழைக்கப்படும் டிங்கர் லசந்த இன்று காலை களுத்துறையில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மங்கள சமரவீர போன்ற தலைவர்களுடன் இணைந்து செயற்படுவது, முதலாளித்துவ தாராளவாதிகளுடன் இணைந்து எமது நாட்டில் ஜனநாயக எழுச்சியை முன்னெடுக்க செய்யக்கூடிய சிறந்ததை நாம் பார்த்துள்ளோம் என்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.

அனுமதி வழங்கப்பட்டாலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதில் மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளது. இதற்காண காரணம் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு இதுவரை செலுத்தவில்லை.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் எதிர்வரும் மார்ச் மாதமாகும் போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் எம்முடன் போராடிய உறவுகளில் நூற்றுக்கு மேற்பட்டவர்களை இழந்தும் உள்ள நிலையில் ஓரு முக்கியமான விடயத்தை தாயக, புலம்பெயர் உறவுகளுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.4 வருடங்களையும் கடந்து தொடரும் எமது போராட்டத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச மனித உரிமைகள் தினம் என பல நாட்களில் பாரிய பேரணிகளையும், போராட்டங்களையும் நடாத்தி சர்வதேசத்தின் கவனத்தை எம் போராட்டத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தோம்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான சிரேஸ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மாத்தறை நுபேவில் உள்ள பழைய டச்சு சந்தை கட்டிட வளாகத்தில் வைக்கப்படும்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை உறுதிப்படுத்தும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan)   தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களது கைகளிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (25) தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததனால் ஏற்பட் விபத்துக்கள் குறித்து சமீபத்தில் செய்திகள் வந்தன. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு நிரப்பப்படும்போது அதன் கலவையில் மாற்றம் செய்வதுதான் என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

2011 இல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார். இவர் புனேவில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார்.

இலங்கையில் தைத்த ஆடைத் தொழில் துறை, தேயிலைத் தோட்ட பொருளாதாரம், சுற்றுலா தொழிற்துறை மற்றும் வீட்டுப் பணி என்ற வகையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அடிமை தொழில் பயன்பாடு சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான சிரேஸ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி இன்று (நவ.25) காலை 10 மணிமுதல் பிற்பகள் 6 மணிவரை கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தை, இல. 483, ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.கொவிட் தொற்று  காரணமாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 'சமரவீர அறக்கட்டளை' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி