நைஜீரியாவின் அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்டை உலுக்கிய பொலிஸ்-விரோத மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. செவ்வாயன்று இரவு, அது முன்னாள் ஜெனரலும் ஆட்சிக் கவிழ்ப்பு குழுவின் தலைவருமான ஜனாதிபதி முகம்மது புஹாரி தலைமையிலான ஊழல் மலிந்த முதலாளித்துவ அரசின் ஆட்சிக்கு பெருகிய முறையில் நேரடி சவாலாக முன்வந்த ஒரு இயக்கத்தை அடக்குவதற்கு, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்ய நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்த படையினரை அனுப்பியது.

அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கான தலைவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலகின் மிகவும் அதிகாரம் மிக்க நபராகவும் அவர் விளங்குகிறார்.

20 வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு நான் ஏன் ஆதரவளித்தேன்?இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது

இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த அதிகரிப்பானது இந்த தீவு தேசம் தனித்துவமானது, மற்ற நாடுகளைப் போலல்லாமல், கோவிட்-19 வைரஸை "கட்டுப்படுத்த" எம்மால் முடிந்தது என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போலிக் கூற்றுக்களை தகர்த்தெரிந்துள்ளது.

மரணதண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த  22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அவர் வழிநடத்தும் சமகி ஜன பலவேகயவின் நிலைப்பாடு.

17 வயது சிறுவனின் உயிரிழப்பிற்கும் அவருக்கு சமீபத்தில் பருவகால காய்ச்சல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதிற்கும் தொடர்பில்லை என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு (21) ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியின் பேரில் இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவை எதிர்த்த விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் கட்சி குழுவினர் 20 வது திருத்தத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்சர்களின் எதிர்கால குடும்ப சக்தியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் இருபதாம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருபதாம் திருத்தத்திற்கான வாக்கெடுப்பு இன்று இரவு (22) நடைபெற உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும், சட்டவிரோத தேக்கு மர  மோசடிக் குறித்த விடயம் தொடர்பில் ஆய்வு செய்துகொண்டிருந்த, இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் இலங்கை வம்சாவளி, நோர்வே நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி பிரதேசத்தில்  உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் பழங்கால இடிபாடுகளுடன் கூடிய சுமார் 100 ஏக்கர் அரச வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்த நிலையில், மீதமுள்ள வனப்பகுதிக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவதில் ஒருசந்தேக நபருக்கு பொலிஸார் உதவியதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும், சட்டத்தரணியுமான உதய பிரபாத் கமன்பிலவிடம்  விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தனி வெடிப்பு ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் தொடர்பில்  அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் ஊடாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தும் திறன் சுகாதார அதிகாரிகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க வட கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி