ஒரு வருடத்திற்கு சுமார் 10 எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக அதிகாரிகள் கூறினாலும், சமீபத்திய இரு வாரங்களுக்குள் 6 சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன இதை இலேசாக விட்டுவிட முடியாதெனவும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பு கூற யாருமில்லை எனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட

‘வெலிகம ஹோட்டலொன்றில், கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் உனவகமொன்றில், கண்டியில் வீடொன்றில், திம்புலாகல வீடொன்றில், பன்னிபிட்டிய வீடொன்றில் மற்றும் 25ம் திகதி குருநாகல் வீடொன்றில் என்று தொடராக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் குருநாகல் வீடொன்றில் நடந்த எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் ஒரு இளம்பெண் எரிகாயங்களுக்குள்ளாகி இறந்துள்ளார்.

நாட்டில எரிவாயு வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றாகள்.இதேநேரம் ஏரிவாயு முடிந்த பின்னர் புதிய எரிவாயு சிலிண்டரை வீட்டுக்கு கொண்டுவந்து பயன்படுத்தும் போது வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்த நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் உண்மை என்னவென்பதை தேடிப்பார்க்க வேண்டும். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணரத்ன கூறுகையில், இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு கலவையில் ஏற்படுத்திய மாற்றம் தானென கூறியுள்ளார்.

இதை இலேசாக விட்டுவிட முடியாது. இப்படியான விபத்துகள் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? எரிவாயு கம்பனிகள் பொறுப்பேற்பதுமில்லை. அரசாங்கம் பொறுப்பேற்பதுமில்லை என கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி