துணிவிருந்தால் போர்க் குற்றங்கள் தொடர்பில் பேசுவதற்கு சர்வதேச நீதிமன்றத்துக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சவால் விடுத்தார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு தமது கண்டனத்தை வெளியிட்டபோது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, கஜேந்திரன் தொடர்ந்தும் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருகிறார். இதனை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எனினும் இதற்கு பதிலளித்த கஜேந்திரன், ”நாங்கள் உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே வந்து பேச முடியாது. எங்களுடை மக்களின் பிரச்சனைகளை பேசுவதற்காகவே வந்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி