கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.

சிவசங்கர் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி பிறந்த அவர், உயிாிழக்கும் போது அவருக்கு 72 வயது. தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

அதோடு தமிழில், வரலாறு, பரதேசி, தானா சேர்ந்த கூட்டம் , சர்கார் உள்ளிட்ட பல படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இவருக்கு பூவே உனக்காக படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டதுடன், மகதீரா படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

அதேவேளை பாகுபலி உள்ளிட்ட பிரபல பாடல்களுக்காக இவர் நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி