எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு அரசாங்க லக் சதொச கிளைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகிக்குமாறு வர்த்தக அமைச்சு விடுத்த வேண்டுகோளை இறக்குமதியாளர்கள் நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்தமானி அறிவித்தல் ஊடாக வரி விகிதம் மாற்றப்பட்டு வழங்கிய வரிச் சலுகை காரணமாக பெருமளவு லாபம் பெற்றுள்ள சீனி இறக்குமதியாளர்கள் சதொச விற்பனை நிலையங்களின் தேவைகளுக்காக 4000 மெட்ரிக் தொன் சீனி வழங்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துள குணவர்தன விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்காமல், தீர்மானிப்பதற்காக கால அவகாசம் கேட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் தனது சீனி ஏகபோகத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக நிபந்தனை விதிப்பார்களென அணுமானிக்கப்படுகிறது.

லக் சதொச விற்பனை நிலையங்களுக்கு சீனி ஒரு கிலோ ரூ.98 வீதம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் கேட்டிருந்தார். தற்போது ஒரு கிலோ வெள்ளைச் சீனி ரூ.116க்கு விற்கப்படுகிறது.

வெள்ளைச் சீனி ஒரு கிலோ இறக்குமதி செய்வறக்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரி 25 சதம் வரை குறைக்கப்பட்டதனால் சீனி இறக்குமதியாளர்கள் பெருமளவு இலாபம் பெற்றதோடு, 15 பில்லியன் வருமானத்தை அரசாங்கம் இழந்தது.

என்றாலும் அதன் பின்பு, ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட உத்தரவின்படி மே 25ம் திகதிதியிலிருந்து சீனி இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் சந்தையில் சீனிக்கான பற்றாக்குறை நிலவியது. இதனால் சீனி இறக்குமதியாளர்களுக்கு வேண்டியவாறு இலாபம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி