தற்போதைய அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களது கைகளிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (25) தெரிவித்தார்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததனால் ஏற்பட் விபத்துக்கள் குறித்து சமீபத்தில் செய்திகள் வந்தன. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு நிரப்பப்படும்போது அதன் கலவையில் மாற்றம் செய்வதுதான் என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

2011 இல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார். இவர் புனேவில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார்.

இலங்கையில் தைத்த ஆடைத் தொழில் துறை, தேயிலைத் தோட்ட பொருளாதாரம், சுற்றுலா தொழிற்துறை மற்றும் வீட்டுப் பணி என்ற வகையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அடிமை தொழில் பயன்பாடு சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான சிரேஸ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி இன்று (நவ.25) காலை 10 மணிமுதல் பிற்பகள் 6 மணிவரை கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தை, இல. 483, ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.கொவிட் தொற்று  காரணமாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் 'சமரவீர அறக்கட்டளை' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்ப கேபிள்களில் கட்டப்பட்ட பாலம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் தலைநகருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

மனித உரிமைகள் பிரச்சினை காரணமாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படும் பயிற்சியை தொடரப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அவர் அல்லது அவரது அரசாங்கம் சரி இல்லை என்றால், மாற்று எதிர்க்கட்சியா என்று ஜனாதிபதி மக்களிடம் கேட்கிறார்.

"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஏன் அஞ்சுகின்றது? தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால் தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி