2024 ஜனாதிபதித் தேர்தல் 

சட்ட விதிகளை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

தேசிய தேர்தல் ஆணையம் இந்த விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகு Meta, YouTube, TikTok மற்றும் Google போன்ற தளங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது.
 
பதிவுசெய்யப்பட்ட  முறைப்பாடுகளில், 121 பதிகள் சமூக ஊடகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 116 பதிவுகள் அகற்றப்படவில்லை, ஏனெனில் அவை சமூக ஊடக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்று கூறப்படுகிறது.
 
மேலும் 500 கூடுதல்  பதிவுகள் தொடர்பான  முறைப்பாடுகளுக்கு சமூக ஊடக நிறுவனங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி