ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்க்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில் இன்று (20) அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK 659 இல் அவர் துபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவையின் கோல்ட் ரூட் விசேட நுழைவாயில் ஊடாக முன்னாள் அமைச்சர் பிரவேசித்து பயணித்துள்ளார்.

அவருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜயநாத கெட்டகொட ஆகியோரும் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் ராஜபக்க்ஷவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் பெரும் பணியைச் செய்திருந்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு  சென்றுள்ளார்.

இதனால் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்‌ஷ ஆகிய இருவரின் வாக்குகளையும் நாமல் ராஜபக்க்ஷ இழந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி