புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் முன்வராத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக தொடரும் போதிலும், முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வ்வாறாயினும், தற்போதைய அரசியல் நெருக்கடியை உணர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். 'சுயேட்சை நாடாளுமன்றக் குழு'வும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.

சுயாதீன நாடாளுமன்ற குழு சமர்ப்பித்த பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதாகவும், அந்த யோசனைகளுக்கு அமைவாக புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியினால் அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலகினால், நாடு மேலும் குழப்பமடைந்துவிடும் எனவும், இடைக்கால அரசாங்கத்திற்குச் சென்று புதிய பிரதமரையும் சர்வகட்சி அமைச்சரவையையும் நியமிப்பதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் 'சுயேட்சை நாடாளுமன்றக் குழு' வலியுறுத்துகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி