பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசிடம் கையளித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

நீர் விநியோக வலையமைப்பு மேம்பாட்டிற்கான திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று ஏழு மணி நேரம் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி