நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்வரும் வாரங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் இதுவரை 599 பேர் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று (30) காலை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவு பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி