முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதுங்கி தலைமறைவாகவில்லை. சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. 

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பந்துல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் தலைமறைவாகவில்லை. அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் . அவர் நாட்டுக்கு வருகை தரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் பந்துல இதன்போது கூறினார்.  

அதேவேளை, புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும், சர்வக்கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி