leader eng

டெல்லி அருகே நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து கிளம்ப முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் ரயில் மூலம் டெல்லி சென்று எப்படியோ போராடும் விவசாயிகளோடு போய்ச் சேர்ந்துகொண்டனர்.

இப்படி சுமார் 10 தமிழர்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தற்போது இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது தவிர நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இவர்கள் டெல்லியை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.

கடன் தள்ளுபடி, விளை பொருள்களுக்கு லாபகரமான விலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கடந்த காலங்களில் டெல்லியில் நடத்திய சிறிய போராட்டங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆனால், அவர்களால் இந்தப் போராட்டத்தில் வந்து பங்கேற்க முடியவில்லை. இது குறித்து கடந்த வாரம் அய்யாக்கண்ணுவிடம் பிபிசி தமிழ் விசாரித்தது. தாங்கள் 300 பேர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க ரயிலில் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால், அதையடுத்து தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் டிக்கெட்களை கேன்சல் செய்துவிட்டதாகவும், மீண்டும் முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு, மீண்டும் டெல்லி செல்ல முயன்ற அந்த சங்கத்தினரை போலீசார் கைது செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்க வந்தவர்கள்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதே அமைப்பைச் சேர்ந்த சிலர் எப்படியோ டெல்லி வந்து சேர்ந்துவிட்டனர்.

அவர்களில் போராட்டத் தலத்தில் இருந்த ஜோதிமணி என்பவரிடம் கருத்து தெரிவிக்கையில்

அவர் தம்மை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் என்று அறிமுகம் செய்துகொண்டார். தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு நிர்வாகிகள் தம்முடன் இருப்பதாகவும், இது தவிர தங்கள் அமைப்பைச் சேர்ந்த மேலும் 6 பேர் தனியாக வந்து போராட்டத்தில் வேறு இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களுக்கு பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் போராட்டக் குழுவினர், உணவு, தங்குவதற்கும், குளிப்பதற்குமான இடங்களைத் தந்து சகோதரத்துவத்துடன் இணைத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

எவ்வளவு நாட்கள் போராட்டத்தில் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு "போராட்டம் முடியும்வரை இருப்போம்" என்று கூறினார் அவர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி