இடம்பெயர்ந்தவர்களுக்கு சாப்பாடில்லை என்று பேஸ்புக்கில் பதிவிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, வீடு திரும்ப முடியாத மோதர ஸ்ரீ வெங்கடேஸ்வர இந்து கோவிலின் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள உணவு மற்றும் குடிநீர் இல்லை என்பதைக் காட்டி, முகநூலில் ஒரு சில குறிப்புகளை பதிவேற்றிய இளைஞர்கள் இருவரை மே 04 அன்று மோதர பொலிசார் கைது செய்துள்ளதாக (anidda.lk) தெரிவித்துள்ளது.