ஏப்ரல் 30 முதல் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை பொதுச் செலவு அதிகாரங்களை வைத்திருப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நிரூபிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சவால் விடுத்துள்ளார்.

அவர் சவாலை கடிதம் மூலமாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவுக்கு இன்று (மே 05) வழங்கியுள்ளார்.

நாட்டின் ஆபத்தான சூழ்நிலையைப் பொறுத்தவரை பொது சேவைக்கான ஊதியம் உள்ளிட்ட அத்தியவசிய செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்க 2020 ஏப்ரல் 30 முதல் தேர்தல் நடாத்தி பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அனைத்து கட்சிகளின் உதவியுடன் கலைக்கப் பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பாக 2020 ஏப்ரல் 28, அன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.அந்த கடிதத்திற்கு  ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர ஏப்ரல் 30 அன்று ஊடகங்களுக்கு ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.

அன்று பிற்பகல் டுவிட்டரில் ஒரு செய்தியை முன்னாள் நிதியமைச்சர், ஜனாதிபதியின் செயலாளரின் பதிலை முக்கியமான அரசியலமைப்பு சிக்கல்களைத் தவிர்த்து  தேங்காய் பையுடன் எங்கே போகிறீர்கள்  எனும் கதை போல் உள்ளது என்று குறிப்பிடிருந்தார்.

பிரிவு 150 (3) இன் படி ஜனாதிபதி ஒரு வெற்று காசோலையைப் பெறவில்லை என்று நான் மீண்டும் சொல்கிறேன்.

 பழைய பாராளுமன்றம் கலைக்கப்ப்பட்ட நாளிலிருந்து" மூன்று மாத காலத்திற்கு மட்டுமே அவர் பணத்தை ஒதுக்க முடியும். புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி எப்போது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி