பாரிய மண் அகழ்வு மோசடியில் ஈடுபடுபவர்கள் அரச அதிகாரிகளின் உதவியுடன் காட்டை அழித்து கொள்ளை அடிப்பதாக கூறப்படுகின்றது.

ரஜரட்டயில் இது நடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பலுகஸ்வெவவில் உள்ள கட்டுகெலியாவ வனத்தை அழித்து, மிஹிந்தலை பிரதேச செயலக பிரிவில் 580 வெல்லராகம கிராம நிலதாரி பிரிவில் பெரிய அளவிலான மண் அகழ்வு மோசடி நடைபெற்று வருவதாக நில மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர சுட்டிக்காட்டுகிறார்.

சஜீவ சாமிகர

100 ஏக்கர் காடுகளை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி முற்றிலுமாக அழித்து, 50 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி மண் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் ஒருவரின் மனைவி, அமைச்சரின் முக்கிய ஆதரவாளர் மற்றும் மிஹிந்தலை பிரதேச சபை அபிவிருத்தி உத்தயோகத்தர் ஆகியோர் இதை மேற் கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார.Sajeewa chamikara

மண் அகழ்வுக்கு அனுமதி பெறுவதற்கு வேறு நபர்களின் பெயர்களை பயன்படுத்தி மேற்கண்ட நபர்கள் அனைவரும் மண் அகழ்வு மோசடியில் ஈடுபட்டு வருவதாக சஜீவ சாமிகர மேலும் தெரிவித்தார்.

"மிஹிந்தலை பிரதேச செயலாளர் இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்."

பலுகஸ்வேவ, கட்டுகெலிய, தம்மென்னாவ மற்றும் கருவலகஸ்வெவ கிராமங்கள் அரச வனப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் சுமார் 600 விவசாய குடும்பங்கள் வாழ்கின்றன, அவற்றின் முக்கிய வருமானம் விவசாயம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கையாகும்.

பெரும்கேத்தில் நெல் பயிரிடப்படுவதுடன் சிறுபோகத்தில் மிளகாய், கத்தரி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

விவசாயத்திற்கு  தேவையான நீர் பலுகஸ்வேவ - கட்டுகெலியாவ அரச வனப்பகுதிலிருந்து கிடைக்கின்றன.

உலர்ந்த மற்றும் ஈரலிப்பான வனப்பகுதியுடன் இந்த காட்டில் இருந்து தொடங்கும் நீரோடைகள் பலுகஸ் குளம், கட்டுகெலியாவ குளம், கம்மன்னவா குளம், எலத்தங்குலம குளம் மற்றும் கருவாலகஸ் குளம் ஆகியவற்றுக்கு நீரை சேமிக்க உதவுகின்றன

மேலும், இந்த வனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிர்களுக்கு தேவையான தண்ணீரை பெற கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிணறுகளுக்கான நீர் ஊற்று கட்டுகெலியாவ பலுகஸ்வெவவில் உள்ள அரசாங்க காட்டிலிருந்து கிடைப்பதாக விவசாய சீர்திருத்த இயக்கம் கூறுகிறது.​

Palugaswewa2

Palugaswewa3

Palugaswewa

 

Palugaswewa1

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி