புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை பொதிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவியைத் துறப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திறந்து வைக்கப்பட்டது.

வேலையில்லா பட்டதாரிகளின் ஒன்றிணைந்த மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.

பதினொரு மாணவர்களை கடத்தி படுகொலை செய்து கடலில் போட்டதுடன் , அவன்கார்ட் ஊழளில் ஈடுபட்ட முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் சமகால அரசாங்கத்திற்கு உள்ளதென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது?

ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது. இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல. மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல ஒரு “தமிழ் அடிமை” இருந்திருந்தால் நல்லதுதானே என்றுதான் அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் பார்வையில் அவர்கள் நினைப்பதில் தவறில்லை.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுவெடிப்பில் அழிவடைந்த மூன்று தேவாலயங்களில்  இரண்டு தேவாலயங்கள் அரசாங்கத்தால் புணரமைக்கப்பட்டு, நினைவுகூறல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கிழக்கில் உள்ள மக்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகளை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க முயல்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்ற கூற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குழப்பத்தில் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசத்தை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை"அலகாபாத் ஸ்வரூப்ராணி மருத்துவமனையில், எனது கணவர் 50 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அவர் பயிற்சி அளித்த பல மருத்துவர்கள் இதே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். ஆயினும், இந்த கோவிட் வைரஸ் காரணமாக ஒரு மருத்துவர் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. என் கண் முன்னே அவர் உயிரிழந்தார். நான் ஒரு டாக்டராக இருக்கும்போதிலும், என்னாலும் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை."

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர மீண்டும் கட்சியில் இணையுமாறு கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது இலங்கை மத்திய வங்கி வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் சந்தையில் உண்மையான பரிமாற்ற வீதத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை lankatruth.com வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி