யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பமான காலநிலையால் நேற்று புதன்கிழமை வீதியில்

பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மதிய நேரம் வீதியில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயங்கி வீழ்ந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மரண விசாரணையின்போது, வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பால் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் காலை உணவை அருந்தாது, வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்று வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்ட வெளியில் பயணித்துக்கொண்டிருந்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி