இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர விடயத்தில் நாட்டின் சட்டங்களை தீவிரமாக புறக்கணித்துள்ளதோடு, அனைத்து மதங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிக்கு தயாரான 243 பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் புதிய அமைதிகாக்கும் குழுவினர், (21) அதிகாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்க நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு 09 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சமூக ஊடகங்களில் வாரணாசியின் ஒரு புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. ஒரு இ-ரிக்‌ஷாவில் அமர்ந்திருக்கும் ஒரு அபலைத் தாயின் காலடியில் உயிர்விட்ட மகனின் படம் அது. இந்தக் காட்சி, உண்மையிலேயே மனதை நொறுங்க வைக்கிறது. இன்னொரு விஷயம் இது பிரதமர் நரேந்திர மோதியின் தொகுதியில் நடந்துள்ளது. அதனால் இது வெகு விரைவிலேயே சமூக ஊடங்களில் வைரலானது. இதே சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு படமும் வைரலாகி வருகிறது.

நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு இடமளிக்க மறுக்கின்றார் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

(மங்கள சமரவீரவின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 21) மங்கள சமரவீரவுடனான எனது கலந்துரையாடலில், ஓரினச்சேர்க்கை மற்றும் குடும்பம் குறித்த ஒரு ஆழமான விஷயத்தை மங்கள சுட்டிக்காட்டினார்.

Feature

உரிமைக்காக தமிழரசுக் கட்சி போராடி வருகின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவது தமிழ்,முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியாக பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

Feature

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுமார், 270 உயிர்களை அழித்தும் 500 பேருக்குக் காயங்களையும் ஏற்படுத்திய இந்தப் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்தும் கூறி வருகிறார்.  

2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு நகர மத்தியில் 2019 ம் ஆண்டு  இறந்த உறவுகளுக்காக மட்டக்களப்பு மாநகர சபையால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன் தாக்குதலில் முற்றாக சேதமடைந்து 31 உயிர்களை காவு கொண்ட சியோன் தேவாலய ஆராதனை இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.

ஆபிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று பகல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது.

கஞ்சா வளர்ப்பினை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும் என்றும், அரச முயற்சியில் அவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்யவும் வேண்டும் எனவும் ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே யோசனை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி