உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்ற கூற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குழப்பத்தில் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கல்வி அமைச்சின் முறையான அனுமதியைப் பெறாமல் ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும் என பேராயர் அறிவித்த விடயத்தை நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் விமர்சித்துள்ளது.

இலங்கையில் கத்தோலிக்க பாடசாலைகள் என எதுவும் இல்லை இலங்கை ஆசிரியர் சங்கம்  அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

"கல்வி அமைச்சின் சரியான அனுமதியைப்  பெறாமலேயே, கத்தோலிக்க பாடசாலைகள்  ஏப்ரல் 21ஆம் திகதி மூடப்படும் என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்திருந்ததாக  அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

"பேராயரின் கூற்றுக்கு அமைய, ஏப்ரல் 21ஆம் திகதி விடுமுறையைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள் அரச உதவி பெறும் பாடசாலைகள் எனவும். அவை 1960ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கம் மற்றும் 1961ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க சட்டத்தின் மூலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.” என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

“அந்த பாடசாலைகளின் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கல்வி அமைச்சினால் வழங்கப்படுகிறது. இந்த பாடசாலைகளின் கல்வி நிர்வாகத்திற்க நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமைய நிர்வகிக்கப்படுகிறது.

இந்த பாடசாலைகளை நிர்வகிக்க கல்வி அமைச்சில் தனியான பிரிவு காணப்படுவதோடு, இதற்கென பணிப்பாளர் ஒருவர் காணப்படுகின்றார்.  இந்த சூழலில், கல்வி அமைச்சின் முறையான அனுமதியின்றி கத்தோலிக்க பாடசாலைகள் என மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் அறியப்படும் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி விடுமுறை வழங்கியமை கடுமையாக பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்”

முன்னதாக, கல்வி அமைச்சு, ஏப்ரல் 9 முதல் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்திருந்த நிலையில், மல்கம் ரஞ்சித்  ஆண்டகை ஏப்ரல் 5 முதல் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்படும் என அறிவித்தமை பாடசாலை விடுமுறை வழங்கும் விடயத்தில் சிக்கலைத் தோற்றுவித்திருந்ததாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி