எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு வேற்புமனு கையளிக்கப்படும் தினம் நெருங்கி வருவதால் சி.சு. கட்சிக்கும் மொட்டுக் கட்சிக்கும் இடையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலையிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

புதிய கொரோனா வைரஸ் (COVID 19) இலங்கையில் பரவிக்கொண்டு செல்வதால் நாட்டை மூடி விடுமாறு பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். மார்ச் 18 நள்ளிரவுடன் அனைத்து விமானங்களும் இலங்கையில் தரையிறங்குவது தற்காளிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களை எதிர்வரும் ௦6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பரிசோதனை அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இம்முறை பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கொரோன வைரஸ் காரணமாக இன்று (17) அரச காரியாலயங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதேச காரியாலயங்கள் அரசாங்க அதிபர் காரியாலயங்கள் திறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்வதால் இப்படியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் தேவை இல்லை என முன்னிலை சோசலிசக்கட்சி அறிவித்துள்ளது.

இம்முறை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என இறுதி முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் குழு இன்று 16 இரவு 7 மணிக்கு கூடி தீர்மானிக்கவுள்ளது.

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கலை விடுதலை செய்யவேண்டும் என சிறைச்சாலைகள் உயர்அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தலை விட நாட்டு மக்களின் உயிர் முக்கியம் என அவர் தேர்தல் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சி.ல.சு.க மாவட்ட தலைவர்கள் சிலர் மொட்டு கட்சியில் வேட்புமனுவில் ஒப்பமிடவில்லை என்பதாக அறியக்கிடைக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி