இன்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி காலை 6 மணி வரை நாடு பூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவரது பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் தன்னை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.

யாழ். அரியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 427 அதிகரித்து மொத்தம் 3,405 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவை விட அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்  இந்தச் சந்தர்ப்பத்தில் பிக் மெச்சை  நிறுத்த முடியாமல் போன ஜனாதிபதியின் அதிகாரம் எப்படிப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல கிரிக்கட் விளையாட்டு வீரரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க.

அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் அடிப்படையில் பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரித்துள்ளார்.

நாளை முதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் இருக்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார தாபனம் நிலைமை மோசமாக உள்ளதாகவும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்றும் வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளயும் விரைவாக எடுப்போம் என்று உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க எமது தாய்க்கட்சி என்பதை மறந்து விட வேண்டாம் எங்களுக்கு எப்போதும் எதிரி ராஜபக்சக்களேதான் நாம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியில் போட்டியிட்டாலும் எமது தாய்க்கட்சி ஐ.தே.க என்பதை மறந்துவிடக்கூடாது.

புத்தளம், சிலாபம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி