சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 51 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன.  இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது.

கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் ஏற்பட்ட மிக அதிகபட்ச மழை இதுவாகும். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.

அவா்களில் 12 பேர் சுரங்க ரெயில் பயணிகளும் அடங்குவா்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இந்த பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது.

சீனாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரூ.75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.  மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

மொத்தம் 12.4 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர்.  சுரங்க பாதகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.

இதேபோன்று, புத்த துறவிகள் சரணாலயங்களில் ஒன்றான சாவோலின் கோவிலும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி