எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதே ஐ.தே க இலக்கு என ஐ.தே.க கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் அதுதான் கட்சியின் உடைவை தடுக்கும் என்கிறார் சஜித் அணியினருக்கும் இது சம்பந்தமான தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிறைய வேளைப்பழுக்களுக்கு மத்தியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று எம் முன் வந்துள்ளது அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெறும் என்று கட்சியின் நிர்மான கர்த்தாவும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் இளைஞர்,யுவதிகள் மற்றும் அறிவுத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் இப்போது கதை பழைய பக்கம் திரும்பியுள்ளது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 95% மானோருக்கு பாராளுமன்றத்தேர்தளில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலர் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு.

உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கொவிட் - 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சகல மாவட்ட செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஐ.தே. க மற்றும் சமகி ஜன பலவேகய கட்சிகளுக்கிடையில் இருந்து வந்த பிரச்சினையை முடித்துக்கொள்வது சமபந்தமாக ஐ .தே கட்சியை தலைமை பொறுப்பை பாரம் எடுங்கள் என்று சமகி ஜன பலவேகய பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று முன்தினம் முன்னாள் சபாநாயகர் கருஜயசூர்யவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குற்றசாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பிடிஎல் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் பிடிஎல் நிருவனத்தின் மேலாளர் கசுன் பலியசேன உட்பட பலர் தொடர்பில் சட்டமா அதிபரினால் கைது செய்வதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் துப்பாக்கியால் சுட்ட ஷாரூக் எனும் நபர் உத்தர பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சியை பிளவு படச்செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இவ்வேளையில் சமூகத்திற்கு தெரியாத மேடைகளில் பிரச்சாரங்கள் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து பொதுஜன பெரமுன சமூக வலைத்தளங்களில் அதனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ஜோர்ஜியாவுக்கு கல்வி பயில்வதற்காக அனுப்பப்படும் இலங்கை மாணவர்களை ஏமாற்றி  அதிக பணம் அறவிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

அபிவிருத்தி வேளைகளில் 70% மானவைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) களே செய்து கொண்டிருந்தன அதை ராஜபக்ச அரசாங்கம் நிருத்தியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி