ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் பசிந்து ஹிருசானை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 மாணவர்கள் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் சூத்திரம் இருந்திருப்பின் 2020 மார்ச் 10 ம்திகதி டீசல் ஒரு லீட்டர் 74 ரூபாவாகவும் பெட்ரோல் ஒரு லீட்டர் 107 ரூபாவாகவும் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்திருக்கலாம் என முன்னால் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோணா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக பெட்டி கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களை இலக்கு வைத்தா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார்.

உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை மிகக் கேவலமாக நடாத்துவதற்காக அக்கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து செய்தி கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவர் அதிபர் மாளிகையில் பதவியேற்றார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக சமகி ஜன பல வேகய கட்சி தேர்தல் திணைக்களத்திற்கு நேற்று (9) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன ஊடாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதியின் 1௦௦ நாட்கள் கடந்துள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தால் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தனக்கு கஷ்டமாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூரியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு கட்டார் அரசாங்கம் தங்களது நாட்டுக்குள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர் வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் கட்சியை பாதுகாக்க வேண்டுமாயின் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்றும் கட்சியின் முன்னிலையில் இருப்பவர்களும் பெரும்பான்மையான தொகுதி அமைப்பாளர்களும் கட்சியின் தலைமைத்துவத்தை கேட்டுள்ளதாக theleader.lk அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையின் கீழ் கரு ஜயசூர்யவின் இல்லத்தில் இடம்பெற்றது இக்கூட்டதிற்கு சஜித்தின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அதேவேளை ரணிலின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர  குறிப்பிட்டுள்ளார் குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி