சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் சகஆராச்சி இன்று (15) மரணமடைந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அவர் யுக்திய செய்தித்தாளின் ஆசிரியரும் லக்பிம பத்திரிகையின் ஆசிரியரும் லேக்கவுஸ் நிறுவனத்தின் நிருவாகக் குழு தலைவரும்  சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முதலாவது செயலாளருமாவர்.

கொவிட் 19 கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு தேர்தலை சில மாதங்களுக்கு தள்ளிப்போடுவது பற்றி தேர்தல் திணைக்களம் பரிசீளிக்கும் இத்தருனத்தில் அப்படி நடந்தால் அது அரசாங்கத்திற்கு பாரியபாதிப்பை  ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

வெளிவிவகார அமைச்சில் கொரோன அச்சம் தனிமைப்படுத்தி சுத்தம் செய்ய நடவடிக்கை.வெளிவிவகார அமைச்சில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளதை அடுத்து அதிகாரியின் சகாக்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானில் இதுவரை மொத்தம் 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேல்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸ் தற்போது இலங்கையிலும் பரவியுள்ளதால் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான காலத்தை நீடிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுக்க முடியும் என்று தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் மூன்றில் இரண்டு பெறுவதென்பது பேச்சுக்கு வேண்டுமானால் பெறக்கூடியதாகவிருக்கும்  ஆனால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சாத்தியமற்றது என பவித்ரா தேவி வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் நாட்டில் இருவருக்கு தொற்றியுள்ளது. மேலும் பரவும் அபாயம் காணப்படுகின்றது இச்சந்தர்ப்பத்தில் இனம்,மதம்,கட்சி,நிறம் அனைத்தையும் மறந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக செயறபட்டு கொரோனா வைரசிற்கு எதிராக போராடுவோம்.

இலங்கை மற்றுமொரு நபர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் நிறைவடைவதற்கு முன் தேர்தலுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்குமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கற்கும் மாணவனின் தந்தைக்கு அன்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.ஆனால் அவரின் மகனுக்கும் கொரோன தொற்று இருப்பதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி