தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்று வருவதற்காக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இதுவரை 11 வீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதாவது பணக்கார நாடுகள் பட்டியலில் மிக குறைவான தடுப்பூசி விகிதம் கொண்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலைச் சிறப்பாக கையாண்டதாக பெருமை கொண்டு இருந்த மொரிசனுக்கு, தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்துவதற்குக் கடுமையான நெருக்கடி எழுந்துள்ளது.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை என்பதற்காக வருந்துகிறேன். சொல்லப் போனால், சில விடயங்கள் நம் கட்டுப்பாட்டில் உள்ளன, சில விஷயங்கள் இல்லை,” என்றார் மொரிசன்.

சிட்னியில் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்கு இருக்கக்கூடும் என்றும் சிட்னி அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில் மொரிசன் இவ்வாறு கூறியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை சுமார் 124 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். கடந்த 16 மாதங்களில் பதிவான மிக அதிக எண்ணிக்கையாக இது உள்ளது.

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளார் அம்மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன்.

பெரும்பாலோருக்குத் தடுப்பூசி போடாத வரையில் நாம் வைரஸ் பரவலுக்கான சில கட்டுப்பாடுகளோடுதான் வாழ்ந்தாக வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோன்று விக்டோரியா மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த புதனன்று 22ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 26ஆக உயர்ந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி