கடவத்தை பகுதியில் உள்ள ஒரு முன்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை, தனது காலை உணவுக்காக
கொண்டு வந்த மீன் பண்ணுக்குள் (Fish Bun) இரண்டு கஞ்சாப் பொதிகள் இருந்துள்ளன.
மேற்படி குழந்தை, அந்த மீன் பணிஸை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, இரண்டு சிறிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வகுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரே, இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
பின்னர் அந்த ஆசிரியர், சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயாரை தொலைபேசியில் அழைத்து, மேற்படி மீன் பணிஸ் தொடர்பில் அறிவித்ததை அடுத்து, அதை அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம் என்று தாயார் அறிவித்துள்ளார். காரணம், அந்த பணிஸ், உவர்ப்பாக இருந்துள்ளது.
பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிnயான்றிலிருந்தே, மேற்படி மீன் பணிஸை வாங்கியதாகவும், பின்னர் ஓட்டுநர் திரும்பி வந்து குழந்தைக்கு அந்த மீன் பணிஸைக் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் தெரியவருகிறது.
பின்னர் அவர்கள் இச்சம்பவம் குறித்து முன்பள்ளியின் அதிபருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனை வாகனத்தின் ஓட்டுநர், பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி, கஞ்சா கடத்தலில் நுட்பமாக ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வேறு ஒருவருக்கு கொடுப்பதற்காக அவர் கொண்டுவந்த கஞ்சா கலந்த மீன் பணிஸ், மேற்படி குழந்தையின் தாயாருக்கு தவறுதலாக விற்றுவிட்டார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவம் தொடர்பாக அதிபர் இன்று கடவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.