கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி பொலிசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றிய விவசாயிகள்  கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் சென்றார்.டிராக்டரை தானே ஓட்டி வந்தார்.  தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் பேரணியாக சென்றார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

போராடி வரும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.  அவர்கள் (மத்திய அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குவதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதில்லை. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் 3-4 வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக உள்ளது என்பதை நாடு அறியும் என கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி