அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (Maithripala Srisena) இது மிகவும் வேதனையான சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு திருகோணமலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் வாகன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட சேதங்களுக்கு லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அனுமதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு மீண்டும் ஒரு முறை செல்லும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் சட்டத்துறை தொழிலுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

முடிந்ததால் 13வது திருத்தத்தினை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று அதிகாலை (12) அகற்றப்பட்டுள்ளது.

உலகில் சதுப்பு நிலங்கள் தொடர்ந்து அழிந்துவரும் காரணத்தால் தும்பிகள் மறைந்து வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மூன்று மாத நினைவஞ்சலியை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'மங்கள பதிப்பகத்தின்' USAID நிர்வாகி சமந்தா பவரின் சிறப்பு உரை மொழிபெயர்ப்பு

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரச சார்பு செயற்பாட்டாளர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

“கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 முதல் 45 தமிழ் இளைஞர்கள் புலிகளை உயிர்த்தெழுப்பியதாகக் கூறி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் போன்றவை அரசாங்கத்தை சார்ந்தவர்கள் பெற்று அனுபவிக்கிறார்கள் போல தெரிகிறது. வேறு ஆட்களுடைய கைகளிலும் இருக்கக் கூடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தில் உள்ள சிறிய கட்சிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி