பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரச சார்பு செயற்பாட்டாளர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நீண்டகாலமாக சிறையில் வாடும் நிலையில், இந்த நாட்டில் கொள்ளையர்களும், திருடர்களும், குற்றவாளிகளும், அரசாங்க நண்பர்களும் குற்றப்பத்திரிகையின்றி விடுவிக்கப்படுகின்றார்கள், இதுவே இலங்கையின் சட்டம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார்.

நீதி அமைச்சின் செலவீனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் டிசம்பர் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது,

கைதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"சிறைக்குள் புகுந்து கைதிகளை துப்பாக்கியால் மிரட்டிய ராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், அவரது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்" அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்த அமைச்சர் இன்னமும் இராஜாங்க அமைச்சராகவே இருக்கின்றார், நீதி மற்றும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சரின் அருகாமையில் அமர்ந்திருக்கின்றார், இந்த செலவீன மீதான விவாதத்தின் போது, ​​நாட்டின் சட்டத்துறையின் நிலைமை இதுதான்,'' என்றார் பொன்னம்பலம்.

மூன்று மாதங்களுக்கு முன்னர்,லொஹான் ரத்வத்த, வெலிக்கடை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள சிறைகளுக்குள் பலவந்தமாக நுழைந்து தமிழ் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக TNPF தலைவர் உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியதை அடுத்து, அரசாங்கம் இரண்டு ராஜங்க அமைச்சர்கள் இராஜினாமா செய்வதாக அறிவித்தது.

இருப்பினும், அவர் இரத்தினம் மற்றும் நகை தொழில் துறை அமைச்சராக உள்ளார். விசாரணை அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் நடந்துகொண்டது மிகவும் பாரதூரமான குற்றச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் எனவும் தெரிவித்துள்ளது.

ஏனைய நாடுகளில் உள்ள பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் சந்தேகநபர்களை நீண்டகாலம் தடுத்து வைக்க முடியாது எனவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாவிட்டால் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இலங்கையில் கொள்ளையர்கள் மற்றும் குற்றவாளிகளே விடுவிக்கப்படுவர் என சுட்டிக்காட்டினார். . மிரிசுவில் கொலையாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததன் மூலம் நாட்டில் உள்ள சட்ட நிலைமைகள் நன்கு நிரூபணமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி