“கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 முதல் 45 தமிழ் இளைஞர்கள் புலிகளை உயிர்த்தெழுப்பியதாகக் கூறி பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் 2009 ஆம் ஆண்டுபோர் முடிந்து போது பத்து வயது சிறுவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 09ஆம் திகதி நீதி அமைச்சின் செலவினத் தலையீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பதியுதீன்,நான் சிறையில் இருந்தபோது எனக்கு பேசக்கிடைத்த இப்போது 20-22 வயதுடைய தமிழ் இளைஞர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் முடிவில் சுமார் 12,000 புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர், ஆனால் சிறு பிரச்சினைகளுக்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நீண்ட காலமாக வழக்குப் பதிவு செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்” என அகில இலங்கை மக்கள் மாங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். 

இந்த கைதிகள் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் அண்மைக்காலமாக பேசியுள்ள போதிலும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஈஸ்டர் ஞாயிறு தாக்குதளுடன் சம்மந்தப்பட்டதாக கூறி சுமார் 4,045 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 250 பேர் ஒரு நாள் சஹாரானின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

இந்த முஸ்லிம் இளைஞர்களை  விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி