சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டு திருகோணமலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் வாகன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சர்வோதயம் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் வரை சென்று ஐனாதிபதி அவர்களுக்கான மகஜர் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் ஊடாக அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்ட மூவின மக்களும் இப்பேரணியில் கலந்து கொண்டு தங்களுக்கு இருக்கக் கூடிய உரிமைசார் பிரச்சினைகளை பதாதைகள் ஊடாகவும், கோசங்கள் ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது மூவின மக்களும் இணைந்து சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மலர வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தி வெள்ளைப் புறா மூலம் அதனை வெளிப்படுத்தியும் இருந்தனர்.

மேற்படி பேரணியானது திருகோணமலை சர்வோதயம் நிலாவெளி வீதி ஊடாக 03ம் கட்டை பகுதியை அடைந்து மீண்டும் கண்டி வீதிக்குச் சென்று அபயபுரம் சந்தி ஊடாக இலிங்கநகர், உவர்மலை பிரதேசத்திற்குச் சென்று இறுதியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக நிறைவுற்றது.

ஆளுநர் அலுவலகம் முன்பாக சனாதிபதி அவர்களுக்கு தயாரித்து அனுப்பவிருந்த மகஜர் ஆளுனர் அவர்களின் வேண்டுதல்களுக்கும் கரிசனைக்கும் அமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் திட்டமிடல் அதிகாரி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் தங்களுக்கான உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை இல்லை, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பினை உடன் நிறுத்துதல், தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதார நிலங்கள் அரசினால் அபகரிக்கப்படுகின்றமை, அடிப்படை உரிமைகளை இலங்கை அரசு உறுதிப்படுத்தல், பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளை உடன் நிறுத்துதல், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் அரசு ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய வண்ணம் இப்பேரணி இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி