பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சிறிய ரக விமானமொன்றை அவசரமாக தரையிறக்க முயற்சித்த தருணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனது அரசாங்கத்தில் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ,உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி. ஜயசுந்தர இன்று (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் , சர்ச்சைக்குரிய ஏரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் அனைத்தையும் அரசாங்கம் குழப்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தனியார் துறை ஊழியர்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர்.

நாடு மிக விரைவில் திவாலாகும் அபாயத்தில் உள்ளது.நாட்டை காப்பாற்றி முன்னேறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்படும் என சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

"நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்குப் பதிலாக உப பிரதேச செயலக காரியாலயங்களைத் திறப்பதற்கு இடமளித்தமை, அரசில் உள்ள மலையக பிரதிநிதிகளின் இன்னுமொரு இயலாமையின் வெளிப்பாடே" என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை முகாமைப்படுத்துவதற்காக துணை நிறுவனமொன்றை அமைக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அமைச்சர் உதய கம்மன்பில பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரபல பின்னனி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 73. இவர் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர்பி.ராமையா பிள்ளையின் இளைய மகன் ஆவார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

தமிழர் பிரதேச பாதுகாப்புக்கு மனநோயுள்ளவர்களை  அரசாங்கம் அனுப்புகிறதா என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தளம் - கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி, குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில், வீடும், வீட்டுடன் இருந்த சிறிய வர்த்தக நிலையமொன்றும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தென்னிலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்கு செல்வதற்காக விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி