நாடு மிக விரைவில் திவாலாகும் அபாயத்தில் உள்ளது.நாட்டை காப்பாற்றி முன்னேறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்படும் என சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மல்வத்தை - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை நேற்று (25) பார்வையிடச் சென்றதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இத்தருணத்தில் செய்ய வேண்டியது பொது வேட்பாளர்கள் பற்றி பேசாமல், தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பொதுவான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்குரிய கால் தாமதமாகிவிட்டது. அரசாங்கம் சொல்வதை விட பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றால், நிதி ஆலோசகர்களை நியமிப்பவர்கள் அவர்களே. எமக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்து கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள், ”என்று அவர் கூறினார்.

நாடு வேகமாக திவாலாகி வருவதாகவும், நிதி ரீதியாக திவாலாகிவிட்டால், பல தசாப்தங்களாக நாட்டை காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி