பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் அனைத்தையும் அரசாங்கம் குழப்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டேயில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதுதான் இன்றைய கேள்வி. இன்று நாம் அனைவரும் அரசியல், பொருளாதாரம், சமூக நெருக்கடிகள் மற்றும் சர்வதேச சமூகத்தை குழப்பிவைத்துள்ளோம். IMF க்கு ஏன் போகவில்லை என்று பலர் அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்று சொல்கிறார்கள். IMF க்கு செல்ல மாட்டோம் என்று அதிகாரத்தில் உள்ள பலம் படைத்தவர்கள் கூறுகிறார்கள். நான் IMF உடன் முழு நேரமாக வேலை செய்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன், எனது 5 ஆண்டுகளில் ஒன்றரை மாதத்தை கழித்து மிகுதி காலங்கள் IMF உடன் வேலை செய்தேன், IMF எனக்கு தீவிரமான நிபந்தனைகளை விதிக்க வைக்கவில்லை. மேலும், சில நிபந்தனைகள் கொஞ்சம் கண்டிப்பானவை என்றும், இவையெல்லாம் தொடக்கூடிய விஷயங்கள் அல்ல என்றும் அவர்களிடம் கூறினேன். அந்த நேரத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி