துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் பலி!
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஊழியர்களை பணிநீக்கியமைக்கு எதிராக குரல்பொடுத்த ஒரு முன்னணி தொழிற்சங்கத் தலைவரை பணி நீக்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் அத்துல களுஆராச்சி இன்று (24) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மக்கள் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொண்ட காலம் முடிந்து விட்டது எனவும் அரசியல்வாதிகள் மக்களை ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
மியான்மர் நிலச்சரிவில் சிக்க உயிரிழந்த 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வடக்கு மியான்மர் கச்சின் மாநிலத்தின் பகந்த் (Hpakant) என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கப் பகுதியில் நேற்று சுமார் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இலங்கையின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும் அரசுக்குள் ஒரு சில மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றன.
அநியாயமான முறையில், எரிபொருட்களின் விலைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஜே.வி.பி., இந்த விலை அதிகரிப்பை எதிர்த்து, நாடளாவிய ரீதியில் இன்றும் (23) நாளையும் (24) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி போன்ற ஊழலற்ற கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சிலை ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் கடந்த 24 வருடங்களாக இருந்து வந்தது.ஹாங்காங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றப்பட்டுள்ளது.
இது பிரிட்டிஷ் சட்ட வரலாற்றில் மிகப்பெரிய மண முறிவு வழக்கு என்று விவரிக்கப்படுகிறது. துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர் மற்றும் அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீனவானம்சமாக £550 மில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடிக்கு தொகை தர வேண்டும் என்று முன்னாள் கணவரான துபாய் ஷேக்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் மற்றும் மருத்துவமனை அமைப்பை பலப்படுத்துதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்ட "ஒற்றுமை மக்கள் சக்தியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்திற்கு சீன அரசாங்கம் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்ததுடன், இராஜதந்திர மட்டத்தில் நிகழ்ச்சித் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியது.
புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான உடப்பு பகுதியில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக, நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.