தமிழர் பிரதேச பாதுகாப்புக்கு மனநோயுள்ளவர்களை  அரசாங்கம் அனுப்புகிறதா என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாண்டிருப்பைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான அழகரெத்தினம் நவீனனின் வீட்டுக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், திருக்கோவிலில் வெறியாட்டம் ஆடிய பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து தப்பி தனது சொந்த வாகனத்தில் பல சோதனைச் சாவடிகளையும் தாண்டி துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் 3 மணிநேரம் பயணங்களை மேற்கொண்டுள்ளார். எனினும் அவரை எவரும் கைது செய்யவில்லை. இது தானா தேசிய பாதுகாப்பு லட்சணம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வெறியாட்டம் ஆடிய பொலிஸ்காரர் இவ்வாறு நடந்துகொண்டதற்கு காரணம் கேட்டால் விடுமுறை தராமையினால் விரக்தி என்கிறார்கள். இன்னுமொருகதை அவருக்கு மனநிலை சரியில்லையாம்.

அப்படியெனின் மனநிலை சரியில்லாதவர்களையா தமிழர் பிரதேச சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக அனுப்புகிறீர்கள்? வடக்கு கிழக்கில் இப்படியான சம்பவங்கள் நடந்துகொண்டுதான்வருகின்றன. வவுணதீவில் பொலிசார் கொலையும் அப்படியே.

தமிழர் பிரதேசத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்தால் உடனே மனநிலை சரியில்லை எனக்கூறி கதையை முடிப்பது வழக்கமாகிவிட்டது.

உரிமை நீதிக்காக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவீனனின் மரணத்திற்கும் நீதி வேண்டிநிற்கிறது?. இதற்கு நீதியான விசாரணை நடாத்தி அக்குடும்பத்திற்கு நியாயம் வழங்கவேண்டும் எனவும் கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி