அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் வழங்காது.இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் காரணம். ஜனாதிபதித் தேர்தலின்போது எமது 15 இலட்சம் வாக்குகள்தான் தீர்க்கமானதாக மாறியது. அன்று ‘மொட்டு’ கட்சியுடன் வரச் சொன்ன மக்கள், இன்று மீண்டும் அந்த க் கட்சியுடன் வேண்டாம் எனச் சொல்கின்றனர். நாம் மக்கள் பக்கம் நின்றே முடிவெடுக்க வேண்டும். இந்த அரசை விமர்சிக்கும் உரிமை எமக்கும் இருக்கின்றது.

அரசிலிருந்து வெளியேறும் காலப்பகுதியை எமது கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் நாம் வெளியேறுவோம். அதுவரை அரசியல் இருப்போம். அரசை தவறான வழியில் செல்ல இடமளிக்கமாட்டோம். அவ்வாறு சென்றால அதற்கு எமது ஆதரவு இருக்காது” – என்றார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி