மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டதால் மலையக பெருந்தோட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோதுமைமாவின் விலையை குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் நான் பல தடவைகள் வலியுறுத்தினேன். நாடாளுமன்றத்திலும் உரையாற்றினேன்.

தற்போது கோதுமை மா நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளது. இது காலம் கடந்த ஞானம். இருந்தாலும் வரவேற்கின்றோம். அதேபோல அத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல ஏனைய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி