1200 x 80 DMirror

 
 

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்,
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ளதாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது.

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்று நோய் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (10) வெளியிட்டது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) ஒத்திவைத்தது.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் விலை உயரலாம் என்ற அச்சத்தில் பல நுகர்வோர் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியிருந்த நிலையில்,
‘உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் அளவு குறைவடையுமே தவிர எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது‘ என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.


கருக்கலைப்புக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.
இதேவேளை, இலங்கையில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாகக் பாதுகாப்பற்ற கருக் கலைப்பு அமைகிறது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையினால் பாதிப்படைந்து இருக்கவும் மக்களின் அழுகுரல்கள் எம்மை வருத்தமடைய செய்துள்ளதாக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர, நிரோஷா அத்துகோரல இன்னும் சில பெண்களோடு இணைந்து வந்து ஜனாதிபதியின சிறிய வீட்டை சுற்றி மேற்கொண்ட போராட்டம் இலங்கையில் மிகப் பெரிய தலைப்பாகும். அது ஒரு முக்கியமான தலைப்பு மாத்திரமல்ல ஒரு சம்பவத்தின் ஆரம்பமாகும். ஐக்கிய மக்கள் சக்தியின தலைமைக்காரியாலயம் மீது நடத்தப்பட்ட கூல் முட்டைத் தாக்குதல் என்பது இதனுடைய ஒரு தொடராகவே இருந்திருக்க வேண்டும். ஹிருணிகாவின் வீட்டுக்கு மல தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இன்று ஊடகங்களில் காணப்பட்டது.

அரசாங்கத்தின் தவறான கொள்கை காரணமாக மக்கள் போராட்டமான வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி