1200 x 80 DMirror

 
 

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் விலை உயரலாம் என்ற அச்சத்தில் பல நுகர்வோர் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியிருந்த நிலையில்,
‘உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும், கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் அளவு குறைவடையுமே தவிர எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது‘ என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கு மாறாக,

லங்கா IOC நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, அனைத்து ரக ஒரு லீட்டர் டீசலுக்கான விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.

ஒரு லீட்டர் டீசலில் புதிய விலை 214 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 254 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நடத்திய “வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏற்கனவே டீசல் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், இந்த மாதம் நான்கு கப்பல்களில் இருந்து 172,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கும் எரிபொருள் விரைவாக விநியோகிக்கப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர். ஒல்க தெரிவித்தார்.

மேலும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பல மசகு எண்ணெய்க் கப்பல்கள் (30,000 மெட்ரிக் தொன்) பெறப்பட்டுள்ளது அதன் மூலம் எரிபொருள் எண்ணெய் பயன்படுத்தும் வெஸ்ட் கோர்ட் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் முழுமையாக இயங்க முடியும் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

“மார்ச் மாதம் 20ஆம் திகதியளவில் மேலும் சில மசகு எண்ணெய்க் கப்பல்கள் வரவுள்ளன. எரிபொருள் கையிருப்பு கிடைத்ததும், தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகள் மிக விரைவாக தீரும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி